தாராபுரத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தாராபுரத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், அரசு ஊழியர்களுக்கு 1.7.2025-ந்தேதி முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியை தீபாவளிக்கு முன்பாக விரைந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து தாலுகா கிளைகளிலும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தாராபுரம் வட்டக் கிளை சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டக்கிளை தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் நிர்மலா வரவேற்றார். இணைச் செயலாளர் சிவராசு, துணைத் தலைவர்கள் மாரிமுத்து, கனகராஜ், தங்கவேல், பொருளாளர் சுமதி, தணிக்கையாளர் சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திரளான அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.