லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது
வெள்ளகோவில் புதிய பேருந்து நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த காவல்துறையினர்;
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் முத்தூர் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதிய பேருந்து நிலையம் அருகில் மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த முத்தூர் பெருமாள் புதூரைச் சேர்ந்த செந்தில் (வயது 58) என்பவரை கைது செய்தனர்.