திருமயம் அருகே வெங்களூரிலிருந்து அம்மாபட்டிக்கு கலியபெருமாள்(75), ரோகினி (18) ஆகிய இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது அம்மாபட்டி அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள சாலையில் அவருக்கு பின்னால் பைக்கை ஓட்டி வந்த ரகு (55) மோதியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரோகினி படுகாயமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்