வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? தீயணைப்பு படை வீரர்கள் செயல்முறை விளக்கம்

பருவ மலையின் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? தீயணைப்பு படை வீரர்கள் செயல்முறை விளக்கம்;

Update: 2025-10-16 11:18 GMT
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை காங்கேயம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இதற்கு தாசில்தார் மோகனன் தலைமை தாங்கினார். காங்கேயம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேசன் முன்னிலை வகித்தார். தீயணைப்பு படை வீரர்கள் செயல் முறை விளக்கம் அளித்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி?, இடிந்த கட்டிடங்களில் இருந்து மக்களை மீட்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. இதில் காங்கேயம் வருவாய் ஆய்வாளர் விதுர்வேந்தன், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News