திருமயம் தாலுகா வம்பராம்பட்டி அருகே பாம்பாறு வடநிலப் பகுதி யில் ஒரு கும்பல் அரசு அனுமதியின்றி மணலை அள்ளிச்செல்ல முயன்றது. இதற்காக சுமார் 60 யூனிட் மணலை மறைவான இடத்தில் பதுக்கி வைத் திருந்தனர்.இதையறிந்த பிலியவயல் மற்றும் வம்பராம்பட்டி கிராமமக்கள் உட னடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் கே.புதுப்பட்டி போலீசார், வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை விரைந்து வந்து கிராஅலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் குவித்து வைக்கப்பட்டி ருந்த மணலை ஆற்றுப்படுகையில் வெட்டி எடுக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் கொட்டி பொக்லைன் இயந்திரம் மூலமாக சமன்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகு றித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.