சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணி (70). இவர் அக்.19 தனது பைக்கில் பொன்னமராவதிக்கு சென்றுள்ளார். அப்போது கேசராபட்டி அருகே, பெட்ரோல் போடுவதற்காக பைக்கை திருப்பிய நிலையில், உலகம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் ஒட்டிவந்த பைக், எதிர்பாராதவிதமாக, மணி ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மணி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.