புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மழை பாதிப்பு குறித்து மட்டுமல்லாது அவசர கால உதவிகளுக்கு 1077 அல்லது 04322-222207 என்ற கட்டுப்பாட்டு மைய எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை ஒட்டி பாதிப்பு ஏற்படும் பகுதியில் உள்ளவர்கள் இந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.