கோவையில் துணிக்கடையில் தீவிபத்து : கிரேன் உதவியுடன் தீயணைப்பு பணி தீவிரம்!

கோவை ஒப்பணக்கார வீதியில் ஸ்ரீ லட்சுமி சில்க்ஸ் துணிக்கடையில் தீவிபத்து.;

Update: 2025-10-22 14:35 GMT
கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள ஸ்ரீ லட்சுமி சில்க்ஸ் துணிக்கடையின் 2வது மாடியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. புகை வெளியேறியதை கவனித்த பாதுகாவலர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிரேன் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 4 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை பரிசோதித்தனர். அதிகாலை நேரத்தில் நடந்த தீவிபத்தால் ஒப்பணக்கார வீதியில் பரபரப்பு நிலவியது. தற்போது தீ பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், புகை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Similar News