விராலிக் காடு சென்னி ஆண்டவர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்!
கோவை மாவட்டம் சூலூர் கருமத்தம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு சென்னி ஆண்டவர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.;
கோவை மாவட்டம் சூலூர் கருமத்தம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு சென்னி ஆண்டவர் முருகன் கோயிலில் ஐப்பசி மாத கிருத்திகை கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவின் முதல் நாளான நேற்று அதிகாலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், காப்பு கட்டுதல், சத்ரு சம்ஹார ஹோமம் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன. பின்னர் மகா தீபாராதனையும் நடைபெற்றது. மொத்தம் 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் பத்தாம் நாள் சூரசம்ஹார நிகழ்வாக சிறப்பாக நடைபெற உள்ளது. முதல் நாள் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.