கரூர்-புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதி தாய் மகன் படுகாயம்.

கரூர்-புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதி தாய் மகன் படுகாயம்.;

Update: 2025-10-23 13:13 GMT
கரூர்-புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதி தாய் மகன் படுகாயம். கரூர் மாவட்டம் காருடையாம்பாளையம் புதுக்கநல்லி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் வயது 51 இவரது தாயார் காளியம்மாள் வயது 70. இவர்கள் இருவரும் புதன்கிழமை அன்று அதிகாலை 4 மணி அளவில் கரூர் அடுத்த திருமா நிலையூர் பகுதியில் புதிதாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் கோவை பேருந்து நிற்கும் இடத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர், அப்போது பேருந்து நிலையத்திற்குள் கரூர் ஆதனூர் அருகே சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் வேகமாக ஓட்டி வந்த விநாயகா என்ற தனியார் நிறுவன பேருந்து பேருந்துக்காக நின்று கொண்டிருந்த முருகேசன் மற்றும் காளியம்மாள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் இருவரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக முருகேசன் அளித்த புகாரில் பேருந்து நிலைய வளாகத்திற்குள் பேருந்தை வேகமாக இயக்கி விபத்து ஏற்பட காரணமான சிவலிங்கம் மீது பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News