பல்லடம் அருகே கோழிப்பண்ணையால் ஈ தொல்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு
கோழிப்பண்ணையால் ஈ தொல்லை பாத்திர பண்டமெல்லாம் ஈ தான் வைரல் வீடியோ;
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே துத்தேரி பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை ஒன்று கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அமைந்து செயல்பட்டு வருகிறது இந்நிலையில் இந்த கோழிப்பண்ணையால் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் ஈ தொல்லை அதிகப்படியாக வீடுகளுக்குள் சமையல் கூட செய்ய முடியாத நிலையில் பாத்திரத்தில் எல்லாம் ஈ மொய்ப்பது ஆகவும் இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுவதாக குற்றச்சாட்டு வைத்து வீடியோ பதிவு செய்து தற்போது தமிழக அரசுக்கு தங்கள் பகுதியை மாசு இல்லாத சுகாதாரமிக்க பகுதியாக நடவடிக்கை எடுத்து தர வேண்டும் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதுபோன்று சம்பவங்களை கண்டு கொள்வதில்லை என்றும் குற்றச்சாட்டை வைக்கின்றனர்