சமூக வலைதளம் மூலம் அந்தமான் இளம் பெண்ணுக்கு காதல் வலை விரித்த காதலன் !

அந்தமான் இளம் பெண்ணை திருமண வாக்குறுதியால் ஏமாற்றிய கோவை இளைஞர் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரால் அதிர்ச்சி – “என் உயிருக்கும் ஆபத்து” என பெண் ஆவேசம்.;

Update: 2025-10-24 08:01 GMT
அந்தமானை சேர்ந்த இளம் பெண் சென்னையில் கல்லூரியில் படிக்கும் போது, கோவையை சேர்ந்த மனோஜ்குமார் என்பவருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அது நாளடைவில் காதலாக மாறி சுமார் 9 வருடங்கள் ஒன்றாக வசித்து வந்து உள்ளனர். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து வைப்பதாக கூறி மனோஜ்குமாரின் பெற்றோர் கூறியதை அடுத்து, சென்னையில் இருந்து வந்து கோவையில் இருவரும் ஒன்றாக தங்கி வந்து உள்ளனர். இந்த நிலையில் திடீரென மனோஜுக்கும் வசதி படைத்த வேறொரு பெண்ணுடன் திருமணம் நடத்த அவரது பெற்றோர் முடிவு செய்து உள்ளனர். இதனை அறிந்த அந்த இளம்பெண் மனம் உடைந்து ஏமாற்றிய குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கரும்பத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். ஆனால் காவல் துறையினர் முறையான வழக்கு பதிவு செய்யாமல் அலைகழித்ததாகவும், சட்ட போராட்டம் நடத்தி தான் வழக்கு பதிவு செய்ய முடிந்தது என்றும் ஆதங்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண். ஏமாற்றியவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பிறகும், மனோஜ்குமார் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் தற்போது ஜாமினில் வந்து உள்ளதாகவும். இதனால் அந்த இளம் பெண்ணின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறியவர், காவல் துறை பொதுமக்களுக்கானதா ? அல்லது அதிகாரம் படைத்தவர்களுக்காகவா ? என்று கேள்வி எழுப்பிய அந்த பெண், சட்டப்படி அனைத்து முயற்ச்சிகளையும் செய்து எந்த பயனும் இல்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

Similar News