கந்த சஷ்டி விழா முருகன் கோவில்களில் சிறப்பு அலங்காரம்
தாராபுரம் காங்கேயம் பகுதிகளில் கந்த சஷ்டி விழா முருகன் கோவில்களில் சிறப்பு அலங்காரம்;
தாராபுரம் புது போலீஸ் நிலையம் எதிரே சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன் தினம் கந்தசஷ்டி விழா தொடங்கியது. 2-வது நாள் விழா நேற்று நடந்தது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ராஜ அலங்காரம் செய்யப் பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நத்தக்காடையூர் பாலசவுந்திரவல்லி உடனமர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவில் சன்னதியில் உள்ள பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழி பாடு நடந்தது.