நத்தக்காடையூர் அருகே குளம் தூர்வாரம் பணி
நத்தக்காடையூர் அருகே கல்லத்துக்கரை குளம் தூர் வாரும் பணி நடைபெற்றது;
புகழூர் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலை, ஏ.எம்.எம். அறக்கட் டளை, கல்லூத்துக்கரை மேம்பாட்டு குழு சார்பில் நத்தக்காடையூர் அருகே குட்டப்பாளையம் கல்லூத்துக்கரையில் புதிதாக குளம் அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 18 ஏக்கரில் அமைக்கப்பட்ட குளத்தை தூர்வாரும் பணிகள் நடை பெற உள்ளது. இதற்கான பூமிபூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில், ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை பொது மேலாளர் சஜீத், கரும்பு துறை தலைவர் கவுதம், மண்டல மேலாளர் அன்பரசு, துணை மேலாளர் விஸ்வபாரதி, காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் பழையகோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர்கள் ராசு சி.எம்.சண்முகசேகரன், அப்பு கே.பழனிச்சாமி, சேகர், முன்னாள் கவுன்சிலர் செல்வம் ராமசாமி, கல்லூத்துக்கரை மேம்பாட்டு குழு தலைவர் சாமிநாதன், உறுப்பினர்கள் சக்திவேல், தங்கராஜ், ஞானமூர்த்தி, கரும்பு கோட்ட அலுவலர் பால் கண்ணன், விரிவாக்க பணியாளர்கள் சந்தோஷ், லாவண்யா, கரும்பு உதவியாளர்கள் சிவப்பிரகாசம், குமாரராஜா, கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.