பல்லடத்தில் ஆடிப்பூரம் கோலாகலம் உணவுக்கு பஞ்சம் இல்லாமல் வாழ வேள்வி
பல்லடம் அருகே ஆடிப்பூரம் கோலாகலம் உணவுக்கு பஞ்சம் இல்லாமல் வாழ வேள்வி;
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடுவேலம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் வார வழிபாட்டு மன்றத்தில் முதலாம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு உணவுக்கு பஞ்சம் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காக ஆன்மீக குரு அருள் திரு ஆதிபராசக்தி அன்னையின் உருவமான பங்காரு அடிகளார் அவர்களின் ஆசியில் ஆடிப்பூர விழாவாக நடைபெற்று வருகிறது, நாளை பரமசிவன் கோவிலில் இருந்து பொதுமக்கள் கஞ்சிக்கலைய ஊர்வலத்தில் ஈடுபட உள்ளதை முன்னிட்டு வழிபாட்டு மன்றத்தில் வேள்வி நடைபெற்றது,இதன் மன்றத் தலைவர் சரசு தலைமையில் இப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர் மங்களம் மகேந்திர குமார் பங்கேற்று வேள்வியை துவக்கி வைத்து நிகழ்ச்சி நடைபெற்றது,வேள்வி குழுவினர் மற்றும் இத்தகுதியை சேர்ந்த பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்