தேன்கனிக்கோட்டை: சாக்கடை கால்வாயில் தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு.
தேன்கனிக்கோட்டை: சாக்கடை கால்வாயில் தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள காடிச்சி பள்ளி பகுதியை சேர்ந்தவர் சென்ன மாதப்பா. இவரது மகன் முரளி (28) கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரச வத்துக்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் முரளி தனது பெற்றோருடன் தங்கி கூலி வேலை செய்து விட்டிற்கு வரும் போது தினமும் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இவர் தண்ணீர் தொட்டி அருகே நடந்து சென்ற போது அங்குள்ள சாக்கடை கால்வாயில் தவறிவிழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் மூச்சு திணறி முரளி பரிதாபமாக உயிரிழந்தனர்.இது குறித்து புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.