கரூர் துயர சம்பவத்தில் சிக்கி காயம் அடைந்த தனக்கு எந்தவித நிவாரண தொகையும் கிடைக்கவில்லை- கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பெண் புகார் மனு

கரூர் துயர சம்பவத்தில் சிக்கி காயம் அடைந்த தனக்கு எந்தவித நிவாரண தொகையும் கிடைக்கவில்லை- கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பெண் புகார் மனு;

Update: 2025-10-27 10:36 GMT
கரூர் துயர சம்பவத்தில் சிக்கி காயம் அடைந்த தனக்கு எந்தவித நிவாரண தொகையும் கிடைக்கவில்லை- கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பெண் புகார் மனு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கரூர் ரெட்டிபாளையத்தை சேர்ந்த பாரதிதாசன் என்பவரின் மனைவி பர்கத் நிஷாபேகம் என்பவர் , மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு ஒன்று கொடுத்தார் . அந்த மனுவில் செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் எனது உறவினர்களுடன் அன்று மாலை 5 மணிக்கு சம்பவம் நடந்த வேலுச்சாமிபுறத்திற்கு சென்றிருந்தேன். அதன் பிறகு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நான் சாக்கடைக்குள் தள்ளப்பட்டு விழுந்து கிடந்தேன்.என்னை அங்கு இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் வீட்டிற்க்கு அனுப்பி வைத்தனர். அடுத்த நாள் காலை 28ம் தேதி மீண்டும் எனக்கு வலி ஏற்ப்பட்டதால் எனது கணவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவகல்லூரிக்கு என்னை அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுதிக்கப்பட்டேன். மூன்று நாட்கள் கழித்து என்னை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்க்கு பல அரசு அலுவலகர்கள் மற்றும் காவல் துறையினர் என்னை வந்து சந்தித்து பேசினார். அதற்கு பின் இன்று வரை எனக்கு அரசு மற்றும் மற்ற எந்தவித நிவாரணங்களும் கிடைக்கவில்லை. அதனால் மாவட்ட ஆட்சியர் என் மனுவை விசாரித்து எனக்கு நிவாரணம் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Similar News