தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு வழங்கினார்

திருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றும் 30 தூய்மை பணியாளர்களுக்கு பாவை பவுண்டேஷன் சார்பில் பாது காவலர்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபுபாதுகாப்பு உபகரணங்களை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்;

Update: 2025-10-27 10:41 GMT
திருச்செங்கோட்டில் உள்ள பாவை பவுண்டேஷன் என்கிற நிறுவனத்தின் சார்பில் திருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாவலர்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்செங்கோடு நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு பாவை பவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஆன கையுறை ஒளிரும் சட்டை கைகளுக்கு கிளவுஸ், மாஸ்க்,ஐ வாஸ் கப், சோப்பு, சானிடைசர், டிஞ்சர்,நகவெட்டி,பேண்டேஜ்,பேண்ட் எய்டு,போரிக் ஆசிட் பவுடர் உள்ளிட்டவை அடங்கிய மெடிக்கல் ஹிட்,முழங்கால் வரையிலான காலனிஉள்ளிட்ட பொருள்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன், பொறியாளர் சரவணன், துப்புரவு அலுவலர் சோழராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் சண்முகவடிவு, ராதா சேகர், திவ்யா வெங்கடேஸ்வரன், புவனேஸ்வரி உலகநாதன், ராஜா, சுரேஷ்குமார், செல்லம்மாள் தேவராஜன், சினேகா ஹரிகரன்,ஆகியோர் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் முன்னதாகஊழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு உறுதிமொழி வாசிக்க அனைவரும்ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

Similar News