துண்டு காளிபாளையம்-டூவீலரை வேகமாக இயக்கியதால் விபத்து. இளைஞர் உயிரிழப்பு.
துண்டு காளிபாளையம்-டூவீலரை வேகமாக இயக்கியதால் விபத்து. இளைஞர் உயிரிழப்பு.;
துண்டு காளிபாளையம்-டூவீலரை வேகமாக இயக்கியதால் விபத்து. இளைஞர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா தென்னிலை தெற்கு துண்டு காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அஜித்குமார் வயது 28. இவர் சனிக்கிழமை இரவு 9:30 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தென்னிலையில் இருந்து கோடந்தூருக்கு செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று உள்ளார். இவரது வாகனம் துண்டு காளிபாளையம் வாட்டர் டேங்க் அருகே சென்றபோது டூவீலரை வேகமாக இயக்கியதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அஜித்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் இறந்துள்ளார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை இச்சம்பவம் அறிந்த அஜித்குமாரின் தாயார் ராணி வயது 52 என்பவர் அளித்த புகாரில் தென்னிலை காவல் துறையினர் உயிரிழந்த அஜித்குமாரின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.