காந்திகிராமம் அருகே டூ வீலர் அடையாளம் தெரியாத வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து.
காந்திகிராமம் அருகே டூ வீலர் அடையாளம் தெரியாத வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து.;
காந்திகிராமம் அருகே டூ வீலர் அடையாளம் தெரியாத வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் சணப்பிரட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் கவின் வயது 20. இவர் வெள்ளிக்கிழமை அன்று இரவு 7: 20 மணியளவில் கரூர் - திருச்சி சாலையில் அவரது டூவீலரில் காந்திகிராமம் டபுள் டேங்க் ரயில்வே பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர மோட்டார் வாகனம் கவின் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதிவிட்டு மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது. இந்த சம்பவத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த கவினுக்கு உடலில் பல்வேறு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக கவின் அளித்த புகாரில் தாந்தோணி மலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.