ஓசூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு.
ஓசூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள பாகலூர் பட்வாரப்பள்ளி பகுதியை சேர்ந்த முனிராஜ் இவரது மகன் ரகு (20) இவர், டிப்ளமோ படித்து வருகிறார். இந்த நிலையில் ரகு தன்து சித்தப்பா விஜயகுமார் என்பவருடன் டிராக்டரில் சென்றார். அச்சந்திரம் என்ற இடத்தில் சென்ற போது டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் ரகு படுகாயத்துடன் சம்பவ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாகலூர் போலீசார் ரகுவின் உடலை மீட்டு விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.