ராசிபுரத்தில் பட்டப்பகலில் பொதுமக்களை கதற விட்ட போதை இளைஞர்கள் கண்மூடித்தனமா அடித்து, கத்தியால் தாக்கி அட்டூழியம் மூன்று பேரை தட்டித் தூக்கிய ராசிபுரம் போலீசார்..
ராசிபுரத்தில் பட்டப்பகலில் பொதுமக்களை கதற விட்ட போதை இளைஞர்கள் கண்மூடித்தனமா பாட்டிலால் அடித்தும், கத்தியால் தாக்கியும் அட்டூழியம் மூன்று பேரை உடனடியாக தட்டித் தூக்கிய ராசிபுரம் போலீசார் ; மேலும் இருவரை தேடும் பணியில் தீவிரம்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலை அருஅருகே இரண்டு மதுபான கடைகள் உள்ள இந்த மதுபான கடையின் உள்ளே தினந்தோறும் ஏராளமான மது பிரியர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட போதை இளைஞர்கள் மதுபான கடைக்குள் இருந்த நபர்களை பாட்டிலால் தாக்கியும் பின்னர் அங்கிருந்து வெளிவந்த இளைஞர்கள் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை பட்டா கத்தியால் தாக்கியும், தகாத வார்த்தையால் திட்டியும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த இளைஞர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு பொதுமக்களை தாக்கியுள்ளனர். பின்னர் வெளியே வந்தவர்கள் பட்டணம் சாலை அருகே காவல்துறையினரால் சாலையில் வைக்கப்பட்டுள்ள பேரி கார்டுகளை எட்டி உதைத்து அதன் மேல் நின்று குதித்து விளையாடி அட்டூழியம் செய்தனர்.. மேலும், அங்கு டீ கடை நடத்தி வரும் சுப்பிரமணி, இவரின் மகன் பிரதீப் ஆகியோரை கத்தியால் தாக்கினர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. சுப்பிரமணி மற்றும் அவரின் மகனை தாக்கிவிட்டு கேசுவலாக 4 பேரும் நடந்துச் சென்றனர். கத்தியுடன் இருப்பதால் பொதுமக்களும் பயத்துடனே கடந்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் போலீசார் போதையில் இருந்த 3 இளைஞர்களை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீசாரின் விசாரணையில், ராசிபுரம் அச்சுக்கட்டி பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ரியாஸ்துன்(21). இவரின் தம்பி அஜ்புதீன் (20) மற்றும் ராசிபுரம் வி.நகர் பகுதியைச் சேர்ந்த பாபு(26) என்பதும் தெரியவந்தது. மேலும், தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். (ரியாத்துன், அஜ்புதீன் ஆகிய இருவர்கள் மீது 257/23 u/s sc/st act வழக்கு இருந்தது; 25.10.25 அன்று தள்ளுபடி ஆனது) போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், போதையில் இருந்த நான்கு பேரும் ராசிபுரம் புதிய பஸ் நிலைய பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்த நபர்களின் பின்தலையில் பாட்டிலைக் கொண்டு அடித்தது தெரிய வந்தது. பாட்டிலால் தாக்கியதில் 3 பேருக்கு மண்டை உடைந்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மண்டை உடைந்த நபர்கள் கூறுகையில் எதற்காக எங்களின் தலையில் பாட்டிலைக் கொண்டு அடித்தார்கள் என்றே தெரியவில்லை என்கின்றனர். அதேபோல, புதிய பஸ் நிலையப் பகுதியில் உள்ள செல்போன் கடையில் நின்று கொண்டிருந்த வாலிபரின் ஒருவரை தாக்கி விட்டு செல்கின்றனர். அவரும் எதுவும் பேசாமல் அடியை வாங்கிக்கொண்டு அங்கேயே நிற்கிறார். போதையில் அவர்கள் இருப்பதை அறிந்த பொதுமக்களும் என்ன செய்வதென்றே தெரியாமல் பயத்துடனே காணப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இது போன்ற ஒரு சம்பவம் இது நாள் வரையில் நிகழ்ந்ததில்லை. பட்டப் பகலில் கத்தியுடன் போதையில் பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்களை முலையிலேயே கிள்ளி எறிய வேண்டும்; இல்லையென்றால் இவர்களால் மிகப்பெரிய அச்சுறுத்தல் ராசிபுரம் நகர மக்களுக்கு ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மையாகும். மேலும் இவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா அவர்களின் உத்தரவின் பேரில் ராசிபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் அவர்களின் ஆலோசனைப்படி ராசிபுரம் காவல் ஆய்வாளர் சுகவனம் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் சுரேஷ், ஈஸ்வரன், சுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று 3 பேரையும் கைது செய்தனர். இவர்களின் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ராசிபுரம் போலீசார் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் ரவுடி பட்டியலில் சேர்த்துள்ளனர். மேலும், இது சம்பந்தமாக தப்பியோடிய பூபாலன், சுஜித் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.. இச்சம்பவத்தால் ராசிபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..