ராசிபுரம் பாலமுருகன் கோவிலில் சூரசம்ஹார விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

ராசிபுரம் பாலமுருகன் கோவிலில் சூரசம்ஹார விழா..;

Update: 2025-10-27 16:14 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் பிரசித்தி பெற்ற எல்லை மாரியம்மன் கோவில், அருள்மிகு பாலமுருகன் கோவிலில் சூரசம்ஹார விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோவிலின் சூரசம்ஹார விழா கடந்த அக்.22-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைதொடர்ந்து நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் , சுவாமி நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா நடந்தது. இதனையடுத்து, திங்கள்கிழமை நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் முன்னதாக முருகருக்கு பால் ,பன்னீர், முன்னதாக சிறப்பு அபிஷேகம், நடன நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றன.பின்னர் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில், சுவாமி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழாவில் முன்னதாக வேல்வாங்கும் நிகழ்வும், பின்னர் மாலை சூரனை வதம் செய்யும் சம்ஹார நிகழ்வும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று கண்டு ரசித்து சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் ஸ்ரீகைலாசநாதர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடந்தது. மேலும் நகரை சுற்றி பல பகுதிகளிலும் உள்ள கோவில்களில் சூரசம்ஹாரம் விழா சிறப்பாக நடைபெற்றது.

Similar News