போச்சம்பள்ளி அருகேசாலை வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்
போச்சம்பள்ளி அருகேசாலை வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்;
கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அடுத்த வளசகவுண்டனூர் ஊராட்சி கே.மோட்டூர் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மண் சாலையை சிமெண்ட் சாலையாக நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்ததாரர் சாலை அமைக்க வந்த நிலையில் இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் பள்ளி குழந்தைகளுடன் நேற்று செப்-26 போச்சம்பள்ளி- சந்தூர் சாலையில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில் அனைவருக் கலைந்து சென்றனர்.