ஊத்தங்கரை அருகே தொழிலாளியை கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
ஊத்தங்கரை அருகே தொழிலாளியை கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள கல்லுார் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(36) கூலித்தொழிலாளியான. இவர் நேற்று முன்தினம் விமல் என்பவருடன் டூவீலரில் பெரிய பொம்பட்டிக்கு சென்றார். அப்போது ஊணாம்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணன்( 62) மற்றும் வரதராஜ்(40) ஆகிய 2 பேரும் மொபைட்டை சாலையின் குறுக்கே நிறுத்தி முத்துப்பாண்டியை தகாத வார்த்தையால் திட்டியும் சரவணன் கத்தியால் வெட்டி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. முத்துப்பாண்டி கொடுத்த புரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிந்து, முதியவர் சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.