ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி தொடக்கம்..*
ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி தொடக்கம்..*;
ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி தொடக்கம்.. சாத்தூர் அருகே சின்னத்தம்பியாபுரம் பெத்துரெட்டிபட்டி மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் பெருமளவு மக்காச்சோளம் விவசாயிகள் பயிரிட்டு இருப்பதால்.அப்பகுதி மக்கள் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ட்ரோன் ஸ்பிரே மூலம் மருந்து தெளிப்பு பயன்படுத்தி விவசாய பணிகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.பெரு கிராமங்களில் விவசாய பணிகளை செய்து வரும் விவசாயிகள் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் செலவுகளை மிச்சப்படுத்தவும் விவசாயம் செய்வதால் விவசாயத்தில் லாபம் ஈட்ட முடிகிறது. பெரும் நகரங்களில் விவசாய நிலங்களில் பூச்சி மருந்து தெளிப்பதற்கு பயன்படும் ட்ரோன் ஸ்பிரே தொழில்நுட்பம் தற்போது கிராமப்புற பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளது. சாத்தூர் அருகே கிராமப்புறங்களில் மக்காச்சோளம் பாசிப்பயிர் பருத்தி தோட்டபயிர்கள் உள்ளிட்ட பல விவசாய பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் பூச்சி மருந்து தெளிப்பதற்காக இந்த ட்ரோன் ஸ்பிரே உபயோகமாக உள்ளது எனவும் விவசாயிகளுக்கு செலவு மற்றும் வேலை ஆட்கள் பற்றாக்குறையை தீர்ப்பதற்காகவும் அனைத்து இடங்களிலும் ஒரே சீரான முறையில் மருந்து தெளிப்பதற்கு பயன்படுகிறது எனவும் அப்பகுதி விவசாயிகள் கூறப்படுகின்றனர்.