நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.*
நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.*;
நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செயல்படும் தனியார் கல்வியியல் கல்லூரி மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் நீர் நிலைகளை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்து தொடங்கிய பேரணியை நகர சேர்மன் பவித்ரா ஷ்யாம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். குளம், ஏரி, ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குப்பைகள் அல்லது கழிவுகளை கொட்டினால் ஏற்படும் கெடுதி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு புறப்பட்ட மாணவ, மாணவிகள் பேரணி சோமையாபுரம், முடங்கியாறு சாலை, மாலையாபுரம், தாட்கோ காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக சென்று அம்பேத்கர் நகர் எதிரே நிறைவடைந்தது. முன்னதாக செல்லும் வழியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் நீர்நிலைகளை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் பாழ் படுத்தினால் நிகழும் பாதிப்புகள் குறித்து ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.