மக்காச்சோள பயிர்கள் நன்கு வளர்ந்து வரும் நேரத்தில் காட்டு பன்றிகள் புகுந்து பயிர்களை அழித்ததால் விவசாயி வேதனையுடன் கண்ணீர் விட்டு கதறல்*
மக்காச்சோள பயிர்கள் நன்கு வளர்ந்து வரும் நேரத்தில் காட்டு பன்றிகள் புகுந்து பயிர்களை அழித்ததால் விவசாயி வேதனையுடன் கண்ணீர் விட்டு கதறல்*;
அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் மக்காச்சோள பயிர்கள் நன்கு வளர்ந்து வரும் நேரத்தில் காட்டு பன்றிகள் புகுந்து பயிர்களை அழித்ததால் விவசாயி வேதனையுடன் கண்ணீர் விட்டு கதறல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுப் பன்றிகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. காட்டு பன்றிகள் நாள்தோறும் பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர் இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் ஆண்டி என்ற விவசாயி சுமார் ஆறு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மக்காச்சோளம் விதைத்த நிலையில் அந்த மக்காச்சோள பெயர்கள் நன்கு வளர்ந்து சோளக்கதிர்கள் முளைத்து வரும் நேரத்தில் காட்டுப்பன்றிகள் விளைநிலத்தில் புகுந்து ஆறு ஏக்கர் நிலத்தில் வளர்ந்துள்ள சோள பயிர்களை சேதப்படுத்தி உள்ளன. இதனால் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை செலவு செய்த விவசாயி ஆண்டி கடுமையான வேதனை அடைந்து வயிறு எல்லாம் எரிகிறது என கண்ணீர் விட்டு கதறி அது காண்போரை கண் கலங்க வைத்தது. வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்ததாகவும், எப்படி குத்தகை பணம் கட்டப் போகிறேன் என தெரியவில்லை எனவும், தனக்கு உரிய இழப்பீடு வழங்கவும் இதற்கு நிரந்தர தீர்வு காணவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது குறித்து கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக்கருக்கு ரூபாய் 2 லட்சம் வரை செலவு செய்து பயிர்கள் நன்கு வளர்ந்து வரும் நேரத்தில் காட்டுப்பன்றிகள் முற்றிலும் பயிர்களை அழித்து விடுகின்றன. காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர் ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் விவசாயிகளின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. காட்டுப்பன்றிகள் தொல்லையை ஒழிக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர் பேட்டி 1 : விவசாயி ஆண்டி பேட்டி 2 : விவசாயி அழகர்சாமி