திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சிறப்பு குழு கூட்டம்

திருச்செங்கோடு நகராட்சி 33 வார்டுகளிலும் சிறப்பு வார்டு குழு கூட்டம் நடைபெற்றது.15 ஆவது வார்டு பகுதியில் பெற்ற சிறப்பு குழு கூட்டத்தில் பகுதி நகர மன்ற உறுப்பினரும் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவரும் ஆன நளனிசுரேஷ் பாபு கலந்து கொண்டார்;

Update: 2025-10-29 14:09 GMT
திருச்செங்கோடு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது இதில் உள்ள மக்கள் நலம் சார்ந்த தேவைகளை எடுத்துக் கூற சிறப்பு வார்டு குழுக்கள் அமைக்கப் பட்டு 3 பேர் பிரதிநிதிகளாக இருந்து வார்டில் உள்ள மக்கள் தேவைகள் குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் எடுத்து கூறி தீர்வு கண்டு வருகின்றனர். அதன்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வழிகாட்டுதலின் படி 33 வார்டுகளிலும் வார்டு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. திருச்செங்கோடு நகர் மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு நகர்மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப் பட்ட 15 வது வார்டின் சிறப்பு கூட்டம் சூளை சந்து குலாளர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் பொறியாளர் சரவணன் வார்டு குழு உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மலையடிவாரம் பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்,நாகர் பள்ளம் பகுதியில் பொதுக் கழிப்பிடம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர் மலையடிவாரம் பகுதியில் வசிப் பவர்களுக்கு பட்டா வழங்க கூடாது என ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால் தற்போது உடனடியாக பட்டா வழங்க இயலாத நிலை உள்ளது மேலும் கோவில் நடைமுறைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத வகையில் குடியிருப்புகள் இருப்பதால் பட்டா வழங்க அனுமதிக்க வேண்டுமென வாதாடப்பட்டு வருகிறது இதில் தீர்ப்பு கிடைத்த பிறகு தான் பட்டா வழங்க முடியும் எனவும் இதே போல் நாகர்பள்ளம் பகுதி கோவில் சார்ந்த பகுதி என கூறப்படுவதால் அங்கு கழிப்பிடம் கட்ட அனுமதி இல்லை என அரசு மறுத்துவிட்டது எனவே தொலைவில் உள்ள நகராட்சி பகுதியில் கழிப்பிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது பொதுமக்கள் சிரமம் பார்க்காமல் அந்த கழிப்பிடத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தெரிவித்தார் நீண்ட நாட்களாக கும்பாபிஷேகம் காணாமல் இருந்த பெரிய ஓம்காளி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முழு முயற்சி எடுத்த நகர் மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் மின் இணைப்பு இல்லாமல் சிரமப்பட்டு வந்த வீட்டிற்கு உடனடி மின் இணைப்பு கிடைக்க ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர் மேலும் தலையில் அடிபட்டு இயங்க முடியாத நிலையில் உள்ள ஒருவர் தனக்கு உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார் இதனை ஏற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தெரிவித்தார் பொதுமக்களில் சிலர் தங்களது பகுதிகளில் உள்ள சிறு சிறு குறைகள் குறித்து மனுக்களாக எழுதி நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் இடம் கொடுத்தனர்.இதேபோல் 12 வது வார்டு பகுதியில் நகர் மன்ற துணைத் தலைவரும் பகுதி நகர் மன்ற உறுப்பினருமான கார்த்திகேயன் வார்டிலும் நாலாவது வார்டு எட்டிமடை பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் பகுதியில் நகர் மன்ற உறுப்பினர் ரமேஷ் முன்னிலையிலும் சிறப்பு கூட்டங்கள் நடைபெற்றது எட்டி மடையில் நடந்த சிறப்பு கூட்டத்தில் தங்களது வார்டில் 90 சதவீத பணிகள் நிறைவுற்று இருப்பதாகவும் மீதமுள்ள 10 சதவீத பணிகளுக்கும் உரிய மனுக்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் தீர்வு காணப்படும் எனவும் நகர்மன்ற உறுப்பினர் ரமேஷ் பொதுமக்களிடம் தெரிவித்தார் ரோடுகள் இல்லாத சில பகுதிகள் குடிநீர் இணைப்பு தேவைப்படும் பகுதிகள்குறித்து மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதுவும் நிறைவேற்றப்படும் என கூறினார்

Similar News