ராசிபுரம் காவல்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது..

ராசிபுரம் காவல்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது..;

Update: 2025-10-29 14:18 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுவாமி சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ராசிபுரம் காவல்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் க. சிவராமன் தலைமை வகித்தார். இதில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய ராசிபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி விஜயகுமார் அவர்கள் பள்ளி மாணவ மாணவிகள் இடம் பேசும்போது இன்றைய தலைமுறை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பலர் தவறான வழியில் செல்கின்றனர். மேலும் போதை பொருளுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை அவர்களே சீரழித்துக் கொண்டுள்ளனர். வாழ்க்கையில் நல்ல ஒழுக்கம், நல்ல படிப்பு இதனைக் கொண்டு சிறப்பாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும், மாணவர்கள் தவறான வழியில் செல்வதால் அவர்கள் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி பெற்றோர்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகவே முடிவடைந்து விடுகிறது. ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தங்கள் பள்ளியில் எந்த அளவிற்கு ஒழுக்கத்தை கற்றுக் கொண்டு நல்ல முறையில் படித்து சிறந்து வாழ்க்கையில் முன்னேற முடியும், அந்த வகையில் நானும் அரசு பள்ளியில் நல்ல ஒழுக்கத்துடன் இதுவரை அதை கடைபிடிப்பதால் தான் இந்த அளவிற்கு நான் வந்துள்ளேன். இது எனக்கு மட்டும் பெருமை அல்ல எனது பெற்றோர்களுக்கும், என்னைச் சார்ந்தவர்களுக்கும் பெருமை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல ஒவ்வொரு மாணவ மாணவிகளும் ஆசிரியர் அறிவுரையை கேட்டு அவர்கள் சொல்கின்ற வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நீங்கள் வாழ்க்கையில் நல்ல நெறிமுறைகளை பின்பற்றி ஒழுக்கத்துடன் வாழ்வதால் மட்டுமே சமுதாயத்தில் சிறந்த ஒரு நல்ல மாணவனாகவும், நல்ல மாணவியாகவும், அனைவரும் போற்றும் வகையில் நீங்கள் வளர முடியும், அதேபோல பாடத்தில் கவனம் செலுத்தும் வகையில் உங்களது ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து விளையாட்டு போன்ற துறைகளில் நீங்கள் பங்கேற்று அதிலும் பல சாதனைகள் படைக்க வேண்டும், இதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக் கொண்டு தினந்தோறும் பல்வேறு சம்பவங்களை கடந்து நீங்கள் பயணிக்கின்ற இந்த பள்ளி பருவம் ஆனாலும் சரி, கல்லூரி பருவமானாலும் சரி, துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டும், அதே வேளையில் அரசியல் பொழுதுபோக்கு மற்றும் நடக்கின்ற பல்வேறு நிகழ்வுகளை நீங்கள் அறிந்து அதனால் ஏற்படுகின்ற நன்மை தீமைகளை குறித்தும் மற்றவர்களுக்கும் நீங்கள் எடுத்துக் கூறி முன் உதாரணமாக திகழ வேண்டும், எனவே இந்த குடி மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையாகாமல் விழிப்புணர்வோடு அனைவரும் செயல்பட வேண்டும், ஒழுக்கம், கட்டுப்பாடு, கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்திலும் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார். இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ், காவலர்கள் முத்துசாமி, வசந்தகுமார், சுமதி, மற்றும் முதுகலை ஆங்கில ஆசிரியர் பள்ளி போதை தடுப்பு விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் க. முருகேசன் உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News