திருச்செங்கோடு பெரிய மாரியம்மன் சின்ன மாரியம்மன் அழகு முத்து மாரியம்மன் திருவிழா தெப்ப தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்ப தேரை கண்டு மகிழ்ந்துசுவாமி தரிசனம்
திருச்செங்கோடு மாரியம்மன் திருவிழாவை ஒட்டி பெரிய தெப்பக் குளத்தில் தெப்பத் தேரோட்டம். பூக்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப் பட்ட தெப்பத் தேரில் ஸ்ரீபெரிய மாரியம்மன், ஸ்ரீசின்ன மாரியம்மன், ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் உலா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்போற்சவத்தை கண்டு சாமி தரிசனம்;
திருச்செங்கோடு வைகாசி விசாக தேர்த்திருவிழாவுக்கு இணையாக ஸ்ரீபெரிய மாரியம்மன், ஸ்ரீசின்ன மாரியம்மன்,அழகுமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது தெப்பத்தேர் விடுவது பாரம்பரியமான வழக்கமாக இருந்தது.1970 வரை தெப்ப தேர் திருவிழா சிறப்பாக நடந்து வந்துள்ளது 1971 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு கடுமையான பஞ்சத்தின் காரணமாக தெப்பக்குளம் வறண்டு போன நிலையில் தெப்பத் திருவிழா நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 50 வருடங்களாக நடைபெறாமல் இருந்த தெப்பத் தேர் திருவிழா கடந்த 2022 ஆம் ஆண்டு மீண்டும் வெகு சிறப்பாக நடைபெற்றது. கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தெப்பத் திருவிழாவை கண்டு மகிழ்ந்தனர். இந்த தெப்ப தேரில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகு முத்து மாரியம்மன், உற்சவமூர்த்திகள் வைக்கப் பட்டு நான்கு குளக்கரைகளிலும்தேர் இழுக்கப்பட்டு ஒவ்வொரு கரையிலும் பூஜைகள் நடத்தப்படும்.அதன்படி இந்த ஆண்டு மாரியம்மன் திருவிழா இன்று 28.10.25 தேதி பூச்சாட்டுதளுடன் தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து கம்பம் நடப்பட்டு தினமும் பெண்கள் திரளாக வந்து நீர் ஊற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில் இன்று 4.11.25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தெப்ப தேர் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு . ஈரோடு ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் 160 பேரல்களைக் கொண்டு தெப்பம் அமைக்கப் பட்டது.திருத்தேர் பவணியை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு,கூடுதல் மாவட்ட நீதிபதி மாலதி,திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் திருச்செங்கோடு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, அர்த்தநாரீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, வாசுதேவன் உறுப்பினர்கள்திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர்வாசுதேவன் சின்ன மாரியம்மன் கோவில் விழா குழு தலைவர் முத்து கணபதி, ஊர் கவுண்டர் ராஜா, கொத்துக்காரர் அன்பரசன்,கோவில் நிர்வாகிகள் பாபு சுதாகர், மற்றும் திருச்செங்கோடு நகர்மன்ற உறுப்பினர்கள்ஆகியோர் 30 அடி நீளம் 30 அடி அகலத்தில் அமைக்கப்பட உள்ள இந்த தெப்ப தேரைகடந்த மூன்று ஆண்டுகளாக திருச்செங்கோடு ஸ்ரீ பாதம் தாங்கிகள் குழுவினரே அமைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தெப்ப தேரில் தேரில் பூ அலங்காரம் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு தெப்பத் திருவிழா நடத்தப்பட்டது முன்னதாக பெரிய மாரியம்மன் சின்னமாரியம்மன் அழகுமுத்து மாரியம்மன் உற்சவர்களை திருத்தேரில் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தேரில் பூஜைகள் நடத்தப் பட்டு மேற்கு கரைக்கு தேர் இழுக்கப் பட்டு அங்கு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து வடகரை தென்கரைகளுக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு கரை திசை பூஜை நடந்தது. பொதுமக்கள் தெப்ப தேர் நிகழ்வை காண பாதுகாப்புக்காக இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதனை சுற்றிலும் பொதுமக்கள் நின்று பாதுகாப்புடன் பார்வையிட்டனர் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டு இருந்தது. தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தெப்பத் தேரில் சென்ற அனைவரும் பாதுகாப்பு உடை அணிருத்திருந்தனர்.திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் கரிகாலன் தலைமையில் வெப்படை குமாரபாளையம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் நகர காவல் நிலைய ஆய்வாளர்வளர்மதி பள்ளிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.