ராசிபுரம் அடுத்த அத்திப்பலகானுர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சாட்டையடி திருவிழா...

ராசிபுரம் அடுத்த அத்திப்பலகானுர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சாட்டையடி திருவிழா...;

Update: 2025-11-04 16:46 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பலகானுரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 23.10.25 அன்று பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கம்பம் நடுதல் ,தீர்த்த குடம் எடுத்தல், பூவோடு பற்ற வைத்தல், தெருக்கூத்து போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் தொடர்சியாக இன்று செவ்வாய்க்கிழமை காலை கோவில் பூசாரி பூவோடு எடுத்து கோவிலை சுற்றி வலம் வருதல் மற்றும் கோவிலை சுற்றி உருளைதண்டம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பாக்கியச் சேர்ந்த ஏராளமான பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் என கலந்து கொண்டு உருளைதண்டம் போட்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் சிறப்பு அம்சமாக சாட்டையடி நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பெண்கள் ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள், வரை தங்கள் வேண்டுதல் நிறைவேறவும் மேலும் பெண்கள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டியும்,பேய்பிடித்தல் காத்துகருப்பு நீங்கவும்,தொழில் விரித்தி அடையவும் கோவில் பூசாரி கையில் உள்ள சாட்டையாள் 3 அடி வாங்கினால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வருடம் தோறும் இந்த திருவிழாவில் சாட்டையால் அடி வாங்கி செல்கின்றனர். இந்த திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாட்டையடி வாங்கி சென்றனர். மேலும் மாரியம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News