ராசிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜை அலங்காரம் பக்தர்கள் சாமி தரிசனம்..
ராசிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜை அலங்காரம் பக்தர்கள் சாமி தரிசனம்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காட்டூர் சாலை பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக் கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்களிலும் அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று அங்காள பரமேஸ்வரி அம்மன் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது..