திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தப் பணிகள் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு

திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்த பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி களஆய்வு செய்தார்.மேலும் திருச்செங்கோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலரின் கண்காணிப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது;

Update: 2025-11-06 09:22 GMT
தமிழ்நாடு முழுவதும் எஸ் ஐ ஆர் என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தப் பணிகள்தீவிரமாக நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்த பணிகள் மூடிட்டு விடப்பட்டுள்ளது தேர்தல் நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று பொது மக்களுக்கு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை வழங்கி எவ்வாறு பூர்த்தி செய்வது எப்போது ஒப்படைப்பது என்பது குறித்து எடுத்துக் கூறி வருகிறார்கள். அந்தப் பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி இன்று திடீர் கள ஆய்வு செய்தார்.திருச்செங்கோடு நகராட்சி உட்பட்ட ராஜா கவுண்டம் பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் துர்கமூர்த்திகளப்பணியாளர்கள் எவ்வாறு பணியாற்றுகிறார்கள் வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்களை வழங்குகிறார்களா? வடிவங்களை வழங்கும்போது பொதுமக்களிடம்எப்படி விளக்கி கூற வேண்டும் என்பது குறித்து எடுத்துக் கூறினார். விண்ணப்பத்தில்கேட்கப்பட்ட விளக்கங்களுக்கு தெரியும்அளவுக்கு நீங்களே படிவங்களை நிரப்புங்கள் எனவும் தெரியாதவற்றை களப்பணியாளர்களிடம் கேட்டு சரியாக பூர்த்தி செய்யும்படியும் பொதுமக்களை கேட்டுக் கொண்டார். ராஜா கவுண்டம்பாளையத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான கண்காணிப்பாளர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கண்காணிப்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம் வாக்காளர்கள் இடம் கேட்க வேண்டிய விவரங்கள்,என்ன பெறவேண்டிய ஆவணங்கள் என்ன என்பது குறித்து எடுத்துக் கூறினார் ஆய்வுப் பணியின் போதுதிருச்செங்கோடுவட்டாட்சியர் கிருஷ்ணவேணி, நகராட்சி ஆணையாளர் வாசுதேவன்,வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சிவக்குமார் ஆகியோர் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

Similar News