கரூரில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் செயற்குழு கூட்டம்
தவெக தலைவர் விஜய் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தீர்மாணம்;
கரூர் மாவட்டம் தாந்தோணி மலை தனியார் மண்டபத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் பசுவை பாரதி தலைமையில் இன்று நடைபெற்றது. கரூர் மாவட்ட தலைவர் செந்தில் மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து தவெக கட்சித் தலைவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றினர். இதில் மாநில நிதி செயலாளர் திருமாவளவன், மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆசிரியர் ரமேஷ், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மணியன் என பலரும் கலந்து கொண்டனர்