விடுதலை சிறுத்தைகள் கட்சி தோகைமலை மேற்கு ஒன்றிய நிர்வாக குழு கூட்டம்
8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் கோரிக்கை மனு;
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோகைமலை மேற்கு ஒன்றிய நிர்வாக குழு கூட்டம் நேற்று முன்தினம் தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான காவிரி குடிநீர், கழிவு நீர் வடிகால் வாரிகளை முறையாக பராமரித்தல், தெருவிளக்கு, பொது சுகாதார வளாகம் அமைத்தல், மாயான சாலை, பேருந்து வசதி போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றி தர ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை நேரடியாக சந்தித்து மனுக்களை வழங்குவது மற்றும் தோகைமலையில் கட்சியின் நீண்ட கால கோரிக்கைகளான தோகைமலையில் உள்ள சமுதாயக்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடகோருதல், தோகைமலை வார சந்தையை முறைப்படுத்தி போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு செயல்பட நடவடிக்கை எடுக்கவும், தோகைமலை பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும், மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் அடுத்த கட்டமாக போராட்டங்கள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மனுவாக தயார் செய்து இன்று 06 ஆம் தேதி வியாழக்கிழமை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமையில் தோகைமலை ஊராட்சி ஒன்றிய ஆணையர் (வளர்ச்சி பணிகள்) மற்றும் கிராம ஊராட்சிகளுக்கான ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமும் வழங்கினர். மனுவை பெற்றுக் கொண்ட ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் அனைத்து கோரிக்கைகளும் முக்கியத்துவம் வாய்ந்தது . எனவே விரைவில் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து உள்ளனர். இந்நிகழ்வில் தோகைமலை ஒன்றிய துணைச் செயலாளர்கள் பிரபு குமார், மலைவேல், சங்கப் பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்