குளித்தலை சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம்
திமுக நகர செயலாளர் மற்றும் எம்எல்ஏ மாணிக்கம் தலைமை வகித்தார்;
கரூர் மாவட்டம் 137 - குளித்தலை சட்டமன்றத் தொகுதி (வாக்குச்சாவடி எண்:- 37 முதல் 60 வரை) வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் திமுக குளித்தலை நகர செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்படும் பணிகளையும் மற்றும் கழக ஆக்கப் பணிகளை எடுத்துரைத்தார். மண்டல பொறுப்பாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாபருல்லா, நகர துணை செயலாளர் செந்தில்குமார், நகர பொருளாளர் தமிழரசன், மாவட்ட விவசாய அணி தலைவர் பாலசுப்ரமணியன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் விஜயபிருந்தாவன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். வாக்குச்சாவடி முகவர்கள் நகர துணை செயலாளர்கள் வடிவேல், இராணி முருகேசன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஆனந்தகுமார், தகவல் தொழில்நுட்ப அணி மகளிர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தலெட்சுமி செந்தில்குமார், நகர மகளிர் அணி அமைப்பாளர் பராசக்தி ஆறுமுகம், நகர்மன்ற உறுப்பினர்கள் பொன்னர், பிச்சை, சரவணன் வட்ட கழக செயலாளர்கள் பிரதீபன், தயால்ராஜ், ரமேஷ், மனோகரன், மேஸ்திரி ராமலிங்கம், ஆனந்தன், நகர கழக பிரதிநிதிகள் விஜயலெட்சுமி, சுந்தரவடிவுசெல்வம், செழியன், கௌசல்யா, நகர விவசாய அணி துணை அமைப்பாளர் செல்வராஜ், வார்டு மகளிர் அணி அமைப்பாளர் சரஸ்வதி செந்தில்குமார்.