ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் புரட்சித்தாய் சின்னம்மா சசிகலா அவர்களுக்கு நிர்வாகிகள் சிறப்பு பூஜை...

ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் புரட்சித்தாய் சின்னம்மா சசிகலா அவர்களுக்கு நிர்வாகிகள் சிறப்பு பூஜை...;

Update: 2025-11-09 16:07 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐப்பசி மாத திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு சின்னம்மா சசிகலா அவர்களின் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் என். கோபால், அவர்களின் இல்ல விசேஷ நிகழ்ச்சிக்கு கழக நிர்வாகிகள் முன்னாள் அரசு தலைமை கொறடா முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி பி.எம். நரசிம்மன், மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் எல்லாபுரம் ரஜினி, சேலம் மாவட்ட மீனவர் அணி செயலாளர் எடப்பாடி சுரேஷ், மாவட்ட பொறுப்பாளர் கன்னியாகுமரி மில்லர், ஒன்றிய செயலாளர் ஜெ. குமார், கலந்து கொண்டு பின்னர் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவிலில் அஇஅதிமுக புரட்சித் தாய் சின்னம்மா நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் என்.கோபால், ராசிபுரம் நகர செயலாளர் எஸ். வேலுச்சாமி, ஆகியோர் தலைமையில் கழக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சின்னம்மா சசிகலா அவர்களின் பெயருக்கு சிறப்பு பூஜை செய்து தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை கொண்டு வர வேண்டி பிரார்த்தனை செய்தனர். மேலும் சசிகலா அவர்கள் நீண்ட ஆயுளோடு வாழ இறைவனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கி சிறப்பித்தனர்.

Similar News