ராசிபுரத்தில் கலை கட்டிய மாரியம்மன் பண்டிகை தேர்க் கடைகளில் அலைமோதிய கூட்டங்கள்..
ராசிபுரத்தில் கலை கட்டிய மாரியம்மன் பண்டிகை தேர்க் கடைகளில் அலைமோதிய கூட்டங்கள்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவிலில் கடந்த மாதம் ஐப்பசி தேர்த்திருவிழா பண்டிகை முன்னிட்டு பூச்சாற்றுதலுடன் திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பல்வேறு கட்டளைதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம் ,பூஜைகள் ,அலங்காரங்கள் செய்யப்பட்டு நாள்தோறும் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்று வருகிறது. கோவில் திருவிழாவை முன்னிட்டு ராசிபுரம் நாமக்கல் சாலை பகுதியில் பல்வேறு கடைகள் ,மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டு திடல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் இப்பகுதியில் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். தொடர்ந்து பொழுதுபோக்கு திடலில் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஏராளமான கூட்டம் அலைமோதியது என்பது குறிப்பிடத்தக்கது.