குளித்தலை வந்தடைந்த காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை

குளித்தலை கடம்பன்துறை காவிரி ஆற்றில் அன்னைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு;

Update: 2025-11-10 07:50 GMT
அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து நடத்தும் 15 ஆம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் நவம்பர் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் பொருளாளர் சிவராம நந்தா தலைமையில் மாதாஜி மற்றும் துறவிகள் வழிநடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் எதிரே உள்ள கடம்பன் துறை காவிரி ஆற்றிற்கு வந்த ரத யாத்திரைக்கு குளித்தலை அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை இணைச் செயலாளர் அருள்வேலன்ஜி தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காவிரி அன்னையை காவிரி ஆற்றிற்க்கு கொண்டு செல்லப்பட்டு பல்வேறு திரவியங்களால் பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காவிரியை மக்கள் வழிபட வேண்டும் தாயாக போற்ற வேண்டும், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் லட்சக்கணக்கான காட்டுமரங்களை நட்டு குடகு மாவட்டத்தில் அதிக மழையைப் பெற தனி திட்டம் உருவாக்க வேண்டும், காவிரியில் சாக்கடை கழிவுகள் மற்றும் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க அவசர சட்டம் உருவாக்க வேண்டும் கங்கையை தூய்மைப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கியது போல காவிரியை தூய்மைப்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் முதல் கட்டமாக தென்னக நதிகளை காவிரியுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கங்களை முன்வைத்து இந்த யாத்திரை நடத்துவதாக இந்து சேனா மற்றும் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் நிறுவனர் அன்னை காவிரி நதி நீர் பாதுகாப்பு அறக்கட்டளை இணை செயலாளர் அருள் வேலன்ஜி தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் கிராமியம் நாராயணன், வாழைக்காய் வியாபாரி சேட், ராமகிருஷ்ணன், கருணாநிதி, மதியழகன், வெங்கடேஷ், வீரமணி, அர்ச்சகர் விஷ்ணு, செந்தில், சந்தோஷ் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்

Similar News