ராசிபுரத்தில் பி.எல்.ஓ. ஊழியர் மீது அதிமுகவினர் புகாரால் பரபரப்பு...
ராசிபுரத்தில் பி.எல்.ஓ. ஊழியர் மீது அதிமுகவினர் புகாரால் பரபரப்பு...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி ஆணையர் நிவேதிதாவிடம் நகர அ.தி.மு.க., செயலாளர் எம்.பாலசுப்ரமணியம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் புகார் மனு ஒன்றை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அ.தி.மு.க., நகர செயலாளர் எம்.பாலசுப்ரமணியம் அளித்த பேட்டியில், ராசிபுரம் நகராட்சியில், 27 வார்டுகள், 48 பூத்துகள் உள்ளன. நேற்று நெ.108 வது பூத்துக்கு விண்ணப்பம் அளிக்க வந்த பி.எல்.ஓ., ஊழியர் 150க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை தி.மு.க., பி.எல்.ஏ. 2 இடம் மொத்தமாக வழங்கியுள்ளார். பி.எல்.ஓ., விடம் விசாரித்த போது, மேலிடம் உத்தரவு அதனால்தான் தருகிறேன் என்றார். யார் கூறியது என்று கேட்டதற்கு பதில் கூறவில்லை. இதற்கான ஆதாரங்கள் ஆடியோ ஆகியவை எங்களிடம் உள்ளன. அதேபோல், ராசிபுரம் பழைய பஸ்நிலையம் அருகே நின்றுக்கொண்டு தி.மு.க., பி.எல்.ஏ 2 நபர் அவ்வழியாக டூ வீலரில் செல்பவர்களை நிறுத்தி விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர். இதற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட பி.எல்.ஏ., ஊழியர்கள் மீது விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இது சம்பந்தமாக அதிமுக நகர நிர்வாகிகள் பலர் நகராட்சியில் நேரில் சென்று ஆணையாளரிடம் மனு வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..