தமிழ்நாடு சோட்டாகான் கராத்தே அகாடெமி சார்பாக இந்த வருடத்திற்கான கராத்தே பட்டயத்தேர்வு ..
தமிழ்நாடு சோட்டாகான் கராத்தே அகாடெமி சார்பாக இந்த வருடத்திற்கான கராத்தே பட்டயத்தேர்வு;
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் புகயாளையம் JVM மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் தமிழ்நாடு சோட்டாகான் கராத்தே அகாடெமி சார்பாக இந்த வருடத்திற்கான கராத்தே பட்டயத்தேர்வு நடைபெற்றது. இதில் JVM பள்ளி மாணவர்கள் மற்றும் மல்லூர் செயன் ஜான் பள்ளி மாணவர்கள் ஆகிய இரு பள்ளியும் சேர்ந்து 80 மாணவ, மாணவாகள் கலந்து கொண்டு கராத்தே தற்காப்பு கலையின் நுணுக்கங்களையும் மற்றும் கட்டா, குமிட்டி ஆகிய பயற்சிகளையும் செய்து தேர்வில் வெற்றி பெற்றனர். தமிழ்நாடு சோட்டாகான் கராத்தே அகாடமியின் தலைமை பயிற்சியாளர் V. சரவணன் அவர்கள் தேர்வு நடத்தினார். பள்ளிகளின் கராத்தே பயிற்சியாளர்கள் மாணிக்கம், மற்றும் பிரபு அவர்கள் தேர்வில் உடன் இருந்தனர். பள்ளியன் சிறப்பு அழைப்பாளர் N. கண்ணன் BSC, M.A அவர்கள் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்புரையாற்றி பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இவ் விழாவில் JVM பள்னியின் தாளாளர் M.முத்துசாமி செயலாளர் P.காத்தமுத்து, பொருளாளர் K.சிவமணி மற்றும் பள்ளியின் முதல்வர் M. சதிஷ்குமார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி அனைவரையும் வாழ்த்தினார்...