*குளித்தலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்
மாநில துணைத்தலைவர் பரபரப்பு பேட்டி;
கரூர் மாவட்டம் குளித்தலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் சிறப்பு தீவிர திருத்தத்தை முன்னிட்டு அவசர மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் தாவூத் கைஸர், மாநில தலைவர் மதார்ஷாபாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் SIR நடைமுறைகள் குறித்தும், அதில் பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள் குறித்தும் எடுத்துரைத்தனர். இதில் மாவட்ட, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாநிலத் துணைத் தலைவர் தாவூத் கைஸர் அளித்த பேட்டி. SIR என்பது ஒரு நல்ல நோக்கத்தோடு கொண்டு வந்ததாக நாம் பார்க்கவில்லை. வடமாநிலங்களிலே தேர்தல் ஆணையத்தின் துணைகொண்டுதான் ஆளக்கூடிய ஒன்றிய பாஜக அரசு பல இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட அதை தோலுருத்தி காட்டியிருக்கிறார். ஹரியானாவில் நடந்த வாக்கு மோசடி வாக்கு திருட்டுகளை பற்றி பேசிருக்காங்க. தமிழகத்தில் SIR என்ற திட்டத்தின் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை ஈர்க்க வேண்டும், தகுதியான வாக்காளர்களை நீக்க வேண்டும், தகுதியற்ற வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலே தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கின்றது இது ஒரு அம்சம். மேலும் ஒரு மாதத்திற்க்குள் இந்த திருத்தம் நடைபெறும் என்பது சாத்தியமே இல்லை, படிப்பறிவு இல்லாத மக்கள் எப்படி நிரப்புவார்கள் இதில் நிறைய குளருபடிகள், பல கேள்விகள் உள்ளது என்பதால் இதை வன்மையாக கண்டிக்கின்ற அம்சம்தான் என மாநிலத் துணைத் தலைவர் தாவூத் கைஸர் பேட்டி அளித்துள்ளார்.