செங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிடப் பணிக்கு பூமி பூஜை
தமிழ்நாடு முதலமைச்சர் பூமி பூஜை தொடங்கி வைத்து 3 மாதம் ஆகியும் பணி நடைபெறவில்லை;
கரூர் மாவட்டம் மத்தகிரி, செங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 2 கழிவறைகள், 4 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடம் அமைக்க ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதிய பள்ளி கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். 3 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை எந்த பணிகளும் தொடங்கவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.