குளித்தலையில் திமுக மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் தலைமை வகித்தார்;
கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி நகரில் உள்ள கிராமியம் கூட்ட அரங்கில் குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் தலைமையில் இன்று நடைபெற்றது. தொகுதி பார்வையாளர் கேசவன் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு எஸ்ஐஆர் படிவம் நிரப்புவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். இதில் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.