ஆர்.டி மலை விராச்சிலேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி
பருவ மழை வேண்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை;
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி மலையில் உள்ள விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி நாளில் பருவ மழை வேண்டி கால பைரவருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வடை மாலை அணிவித்து தேங்காய் பூசணிக்காய் விளக்கு ஏற்றி கால பைரவரை வழிபட்டனர். கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையினை திருக்கோவில் அர்ச்சகர் ஸ்ரீகந்தசுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் வேதரத்தினம் சிவம் ஆகியோர் நடத்திருந்தனர்.