குளித்தலை போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம்
பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களிடம் துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு;
கரூர் மாவட்டம் குளித்தலை போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் முன்னிட்டு குளித்தலை பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களிடம் சாலையில் நடந்து செல்லும் போது இடதுபுறமாக மட்டுமே செல்ல வேண்டும் சாலையின் குறுக்கே கடந்து செல்லும்போது இரு புறங்களிலும் வாகனங்கள் வருகிறதா என கவனித்து செல்ல வேண்டுமென போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் பாஸ்கரன் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கி ஆலோசனை வழங்கினார். இதில் போக்குவரத்து காவலர்கள் கிருத்திகா, திருமாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்