தளிர்விடும் பாரதம் அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் தின விழா

குமாரபாளையத்தில் தளிர் விடும் பாரதம் அமைப்பின் சார்பில் குழந்தைகள் தின விழா;

Update: 2025-11-14 13:51 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் தின விழா குமாரபாளையம் சி.எஸ்.ஐ நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைப்பின் தலைவர் சீனிவாசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தளிர்விடும் பாரதம் வரதராஜன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் தள்ளிவிடும் பாரதம் அறக்கட்டளையின் சார்பில் சர்வீஸ் டு சொசைட்டியின் நிறுவனர் ரவி சொக்கலிங்கம் அவர்களின் ஆலோசனையின்படி பள்ளி மாணவ மாணவியர் அனைவருக்கும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளின் புகைப்படத்துடன் வாழ்த்து மடல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, மாறுவேடப் போட்டி, கவிதை போட்டி, கதை சொல்லும் போட்டி, மற்றும் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு பங்கேற்றவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் தளிர்விடும் பாரத்தின் செயலாளர் பிரபு அவர்கள் பேசும்பொழுது, குழந்தைகளின் கல்வி, நலன் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவை குழந்தைகள் அனைவரும் அன்பாக நேரு மாமா (சாச்சா நேரு)*என்று அழைத்ததால் குழந்தைகள் மீது அளவில்லா பற்றினை நேரு அவர்கள் வைத்திருந்தார். நேரு அவர்கள் ஓர் நேர்காணலின்போது நாட்டின் எதிர்காலம் குழந்தைகளைச் சார்ந்திருப்பதால் அவர் குழந்தைகளை நேசிக்கிறாரா என கேட்ட பொழுது, இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குகிறார்கள் என நான் எப்பொழுதும் உணர்ந்து இருக்கிறேன் என பதிலளித்தார். மேலும் பிரபு அவர்கள் பேசும் பொழுது, இன்றைய சூழ்நிலையில் குழந்தைகள் தங்களது தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அதற்காக நம்மிடையே இருக்கக்கூடிய சூழ்நிலைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டு பேசினார். நிகழ்வில் சமூக சேவகி சித்ராபாபு, தளிர்விடும் பாரதம் சந்திரா, மகிழ்மித்திரன் மற்றும் பள்ளி ஆசிரியைகள் ஸ்டெல்லா, ஹெலன் பிரிஸ்சில்லா, ராணி, ஜமுனா மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Similar News