குளித்தலையில் நகை கடை உரிமையாளர்கள் மற்றும் அடகு கடை உரிமையாளர்களுடன் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை

குளித்தலை கோட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஆலோசனை;

Update: 2025-11-14 14:04 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணா திருமண மண்டபத்தில் குளித்தலை உட்கோட்ட காவல்துறை சார்பில் நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நகை கடை விற்பனையாளர்கள் மற்றும் அடகு கடை உரிமையாளர்களிடம் சிசிடிவி கேமரா அமைத்தல், ஒலி எழுப்பும் கருவி அமைத்தல், தனியார் பாதுகாவலர்கள் நியமனம் செய்தல், நகைகளின் தரம் முறையாகக் கண்டறிதல், சந்தேகிக்கும் நபர்களை கண்டறிதல், நகை அடகு வைப்போரின் விவரங்களை முழுமையாக சேகரித்தல், மீட்கப்படாத நகைகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர். இந்த வழிகாட்டுதலை அனைவரும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்வில் குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன், நங்கவரம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் லாலாபேட்டை எஸ்ஐ உதயகுமார் பாலவிடுதி எஸ்ஐ ராஜேந்திரன், சிந்தாமணிபட்டிய எஸ்ஐ தங்கசாமி, மாயனூர் எஸ்எஸ்ஐ சடையன், குளித்தலை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் செல்வக்குமார், இரத்தினகிரி மற்றும் குளித்தலை கோட்ட காவலர்கள், நகைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News