ராசிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பு. லாபகமாக மீட்டு காப்பு காட்டில் விடுவிப்பு...

ராசிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பு. லாபகமாக மீட்டு காப்பு காட்டில் விடுவிப்பு...;

Update: 2025-11-14 14:10 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்துகாளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(57)இவர் தனது இருசக்கர வாகனத்தில் ராசிபுரம் பூக்கடை வீதி பகுதிக்கு வந்துள்ளார்.அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து வித்தியாசமான முறையில் சவுண்ட் வரவே அதனைத் தொடர்ந்து மாரியப்பன் இருசக்கர வாகனத்தை சோதித்துள்ளார். இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் பகுதியில் சுமார் 2 அடி நீளம் கொண்ட கட்டுவிரியான் பாம்பு மறைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் உதவியுடன் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி பாம்பை உயிருடன் மீட்டு, லாபகமாக காப்பு காட்டில் விடுவித்தனர். இதனால் கடைவீதி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..

Similar News